உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கால்பந்து போட்டிக்கு தகுதி: மாணவிகளுக்கு பாராட்டு

 கால்பந்து போட்டிக்கு தகுதி: மாணவிகளுக்கு பாராட்டு

செஞ்சி: மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மாணவிகளை எம்.எல்.ஏ., பாராட்டினார். மயிலத்தில் மாவட்ட அளவில் நடந்த 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகள் முதலிடம் பிடித்தனர். இதன் மூலம் மாநில அளவிளான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டி வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள உள்ள மாணவிகள் மஸ்தான் எம்.எல்.ஏ.,வை சந்தித்தனர். அவர்களுக்கு எம்.எல்.ஏ., விளையாட்டு உபகரணங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதே நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் நடந்த கலை திருவிழாவில் பரதநாட்டியத்தில் வெற்றி பெற்ற மாணவிகளும் வாழ்த்து பெற்றனர். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, தலைமையாசிரியர் சத்திதானந்தம் ஆசிரியர்கள், திருமலை, ஸ்ரீதிலிப், ஹாஜா பாஷா, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆனந்த்ராஜ், பழனிராஜ், மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, தொண்டரணி பாஷா உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை