மேலும் செய்திகள்
தலை மறைவு குற்றவாளி கைது
16 hour(s) ago
வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம்
17 hour(s) ago
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது
17 hour(s) ago
விழுப்புரம்: திண்டிவனத்தில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.திண்டிவனம், ஜக்காம்பேட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ்குமார், 23. இவரும், அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் மருதமலை,25, என்பவருகம், கடந்த 4ம் தேதி ஜக்காம்பேட்டை அருகே பைக்கில் வந்த நபரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, ரூ. 1,100 மற்றும் பைக்கை வழிப்பறி செய்தனர்.இந்த வழக்கில், ரமேஷ்குமார், மருதமலையை மயிலம் போலீசார் கைது செய்தனர். இவர்களின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., தீபக்சிவாச், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் பழனி உத்தரவின் பேரில், மயிலம் போலீசார், ரமேஷ்குமார், மருதமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
16 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago