உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருக்கோவிலூர் பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க.,-தி.மு.க., கடும் போட்டி

திருக்கோவிலூர் பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க.,-தி.மு.க., கடும் போட்டி

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு அ.தி.மு.க.,- தி.மு.க., இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. திருக்கோவிலூர் பேரூராட்சி தேர்தலை பொறுத்தவரை வழக்கமாக கூட்டணி அமைத்து போட்டியிடும் காங்., கட்சியின் ஆதிக்கமும் மேலோங்கி நிற்கும். வரும் உள் ளாட்சி தேர்தலில் காங்., தனித்து போட்டியிடுவதால் அதன் நிலை என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர். 2001ல் அ.தி.மு.க.,வில் 'சீட்' கிடைக் காததால் அதிருப்தியடைந்த வினாயகமூர்த்தி சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அ.தி.மு.க., ஒன்றிய செயலாளராக உள்ள அவரது மனைவி கவிதா களமிறக்கப் பட்டுள்ளார். இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தொழிலதிபர் முருகன் மனைவி தேவியை தி.மு.க., தேர்வு செய்துள் ளது. இருவருமே சமபலத்துடன் மோதுவதால் இவர்களுக்கு இணையாக வேட்பாளர்களை தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு காங்.,- தே.மு.தி.க., கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜியின் தாய் அனுராதா,65 என்பவர் தே.மு.தி.க., சார்பில் நிறுத்தப் பட்டுள்ளார். செல்வாக்கு மிக்க அ.தி.மு.க.,- தி.மு.க., வேட்பாளர்களுக்கு இவர் எந்த அளவிற்கு போட்டியாக இருப்பார் என்பது கேள்விக் குறியாக உள்ளது.

தனக்கென தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்து வைத்துக் கொண்டிருந்த காங்., சட்டசபை தேர்தலில் தோற்றாலும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற போராடும். இதற்கான தகுதியான வேட்பாளரை களமிறக்க காங்., தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ள நிலையில் அ.தி.மு.க., தி.மு. க.,விற்கு ஈடு கொடுக்கும் வகையில் காங்., வேட்பாளர் இருப்பாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க.,வை பொறுத்தவரை தனித்து களம் காண்பதால் வேட்பாளரை தேடிப்பிடித்து அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. பேரூராட்சி தலைவர் பதவியை பிடித்தே ஆக வேண்டும் என அ.தி.மு.க.,- தி.மு.க., கட்சியினர் வரிந்து கட்டி களமிறங்கியுள்ள நிலையில் மற்ற கட்சிகள் தேர்தலில் கரையேறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை