உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதம் அடைந்த மின் கம்பங்கள் செங்கமலநாச்சியார்புரம் மக்கள் அச்சம்

சேதம் அடைந்த மின் கம்பங்கள் செங்கமலநாச்சியார்புரம் மக்கள் அச்சம்

சிவகாசி சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் மேற்கு தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சேதம் அடைந்துள்ள மின் கம்பங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் மேற்கு தெருவில் பெரும்பான்மையான மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது. சிமெண்ட் பெயர்ந்து துருப்பிடித்த கம்பிகளால் தாங்கி நிற்கிறது. இந்த சேதம் அடைந்த மின் கம்பங்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருப்பதோடு தெருவின் ஓரத்திலும் அமைந்துள்ளது. குறுகிய தெரு என்பதால் சிறிய வாகனங்கள் சென்றாலே மின்கம்பத்தில் உரசும் நிலை ஏற்படுகின்றது. தவிர பெரிய காற்று அடித்தாலோ, மழை பெய்தாலோ மின்கம்பம் சாய்ந்து விழ வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சேதம் அடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என இப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை