உள்ளூர் செய்திகள்

யோகாவில் சாதனை

விருதுநகர்: தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காக் நகரில் நடந்த உலக யோகா போட்டியில் 6 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவில் விருதுநகர் ஆவல் சூரன்பட்டியை சேர்ந்த கிரிஷா பங்கேற்று பொதுப்பிரிவு, ஆர்த்தி ஸ்டிக் யோகா பிரிவுகளில் 2 தங்கப்பதக்கங்கள், 2 சாம்பியன் கோப்பைகளைவென்றார். இப்போட்டியை ஆசிய யோகா சம்மேளனம், ஹத யோகா விஞ்ஞாச தாய்லாந்து அமைப்பு இணைந்து நடத்தியது. இதில் இந்தியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து பங்கேற்றனர். தொழிலதிபர் அம்பாள் முத்துமணி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ