உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அடையாள அட்டைக்கு அலைக்கழிப்பு மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

அடையாள அட்டைக்கு அலைக்கழிப்பு மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டையை வழங்காமல் தொடர்ந்து அலைக்கழிப்பு செய்ததால் மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்.கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் அடையாள அட்டை பெற வரந்தோறும் பாதுகாவலர்களுடன் வந்து செல்கின்றனர். நீண்ட காலமாக மாற்றுத்திறனாளி நல அலுவலர் பணியிடம் காலியாக உள்ளதால் உடனடியாக அடையாள அட்டை வழங்குவதில்லை.கடந்த புதன் கிழமை மருத்துவமனையில் நடந்த மதிப்பீட்டு முகாமில் பங்கேற்றவர்களுக்கு ஜூலை 30ல் அடையாள அட்டை தரப்படும் என அறிவித்தனர். இதை நம்பி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலர்களுடன் வந்தனர். கூடுதல் பொறுப்பு அலுவலரிடம் கையெழுத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதால் தாமதம் என தெரிவிக்கப்பட்டது. மதியம் 2:00 மணி ஆகியும் அடையாள அட்டை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை