உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் கேன்சல்: ரூ.20 ஆயிரம் இழப்பீடு

பஸ் கேன்சல்: ரூ.20 ஆயிரம் இழப்பீடு

ஸ்ரீவில்லிபுத்தூர் : சென்னையில் இருந்து சிவகாசி வருவதற்கு ரிசர்வேஷன் செய்திருந்த நிலையில், முன்னறிவிப்பு இன்றி டிராவல்ஸ் பஸ் கேன்சல் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.திருத்தங்கலை சேர்ந்தவர் ரவிக்குமார். மனைவி மீனா, மகள் நிவேதா. மூவரும் 2023 ஜன.17ல், சென்னை ஆலந்தூர் கோர்ட் ஸ்டாப்பில் இருந்து சிவகாசி வருவதற்கு, வெங்கடேஸ்வரா டிராவல்சில் ஆன்லைன் மூலம் ரூ. 2 ஆயிரத்து 250 செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தனர். அன்றைய தினம் மூவரும் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தும் பஸ் வரவில்லை. மாற்று ஏற்பாடு எதுவும் செய்யாமல் டிராவல்ஸ் சார்பில் கேன்சல் என ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பி உள்ளனர்.மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி விசாரித்தனர்.இதில் டிக்கெட் பணம் ரூ. 2 ஆயிரத்து 250 திரும்பத் தரவும், மன உளைச்சலுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு, வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரத்தை, வெங்கடேஸ்வரா ட்ராவல்ஸ் நிறுவனமோ அல்லது அதன் பங்குதாரர்கள் சேர்ந்தோ அல்லது தனித்தோ வழங்க உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ