உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி வேலாயுதம் ரஸ்தா ரோட்டில் திரியும் மாடுகள்

சிவகாசி வேலாயுதம் ரஸ்தா ரோட்டில் திரியும் மாடுகள்

சிவகாசி : சிவகாசி வேலாயுதம் ரஸ்தா ரோட்டில் திரியும் மாடுகளால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்குகின்றனர். சிவகாசி மாநகாரட்சி பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் வேலை பார்ப்பதை தவிர பெரும்பாலானோர் பசு மாடுகள் வளர்க்கின்றனர். மாடுகளை வளர்ப்பவர்கள் பால் கறக்கும் நேரத்தில் மட்டுமே பிடித்துச் சென்று, மீண்டும் நகர் பகுதியில் விட்டுச் சென்று விடுகின்றனர். மாடுகளும் தங்கள் உணவிற்காக தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், ரோட்டிலேயே நடமாடுகின்றன.நகர் முழுவதும் குறைந்தபட்சம் நுாற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு சேர்மன் சண்முக நாடார் ரோடு, வேலாயுத ரஸ்தா ரோடு, ஞான கிரி ரோடு, முண்டகன் தெரு , விஸ்வநத்தம் ரோடு, பைபாஸ் ரோடு, திருத்தங்கல் மெயின் பஜார், கருப்பசாமி கோயில், மாரியம்மன் கோயில், விருதுநகர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டிலேயே நடமாடுகின்றன.காலையில் அவசர வேலையாக டூ வீலரில் செல்பவர்கள், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தினமும் குறைந்தது 5 விபத்துகள் ஏற்படுகின்றது. பள்ளி மாணவர்கள் அடிக்கடி கீழே விடுகின்றனர். வாகனங்களில் செல்பவர்கள் அலாரம் அடிக்கையில் மாடுகள் தெறித்து ஓடி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு சில மாடுகள் ரோட்டிலேயே அமர்ந்து வாகனத்திற்கு வழி விடுவதே இல்லை. அதே சமயத்தில் பெரிய வாகனங்களில் மாடுகள் அடிபட்டும் இறக்கின்றன. வேலாயுதம் ரஸ்தா ரோட்டில் நடமாடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை