உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த மின்கம்பம் மாற்றி அமைக்க எதிர்பார்ப்பு

சேதமடைந்த மின்கம்பம் மாற்றி அமைக்க எதிர்பார்ப்பு

சிவகாசி : சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் இருந்து மாரனேரி செல்லும் ரோட்டின் ஓரத்தில் சேதம் அடைந்துள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிவகாசி அருகே காக்கி வாடன்பட்டியில் இருந்து மாரனேரி செல்லும் ரோட்டில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் ஒயர்கள் கட்டப்பட்டுள்ள இந்த மின் கம்பங்களில் சில சேதமடைந்துள்ளது. மின் கம்பங்களில் சிமின்ட் பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கின்றது. சேதமடைந்த மின்கம்பங்கள் ரோட்டின் ஓரத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். பெரிய மழை பெய்தாலோ காற்று அடித்தாலோ விழும் நிலையில் உள்ளது. வாகனங்கள் செல்லும்போது மின்கம்பங்கள் விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை