மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
15 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
15 hour(s) ago
விருதுநகர் : விருதுநகரில் மண்மேவிய ரோடுகளால், ஆடிக்காற்றில் பறக்கும் துாசுகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதுடன் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. மேவிய மண்ணை அகற்ற வேண்டும்.விருதுநகரில் ஆடி மாதம் என்பதால் காற்றின் திசைவேகம் அதிகரித்து வருகிறது. இதனால் அதிக காற்று வீசுகிறது. இந்நிலையில் ஜூன், ஜூலை மாதங்களில் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் ரோட்டோரமும், சென்டர் மீடியனை ஒட்டியும் குவிந்த மணல் அப்படியே ரோட்டில் பரவியது.காலை நேரங்களில் வெயில் அடிக்கும் போது ஈரம் காய்ந்து ரோட்டில் மேற்பரப்பில் மண் படிந்து விடுகிறது. இவை தற்போது அதீத காற்று வீசுவதால் மண்ணையும் சேர்த்து வாகன ஓட்டிகள் மீது துாசு போல் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். நான்கு சந்திப்பு போன்ற இடங்களில் விபத்தும் ஏற்படுகிறது.காற்று இயற்கையானது அதை தடுக்க முடியாது. ஆனால் ரோடுகளில் மண்மேவி போக்குவரத்துக்கு லாயக்கற்ற ரோடாக இருப்பதை சரி செய்ய முடியும் இது நெடுஞ்சாலை, நகராட்சி ரோடுகளில் அதிகளவில் உள்ளது. இந்த பாதிப்பை சரி செய்ய வேண்டும். மண்மேவியிருப்பதை அகற்ற வேண்டும். இல்லையெனில் காற்று காலத்தில் வாகனம் ஓட்டும் முதியவர்கள் சறுக்கி, தடுமாறி விழ வாய்ப்புள்ளது. பெண்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. ஆபத்தை உணர்ந்து மண்மேவிய ரோடுகளை சரி செய்ய வேண்டும்.
15 hour(s) ago
15 hour(s) ago