உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருக்கன்குடியில் பயன்பாட்டிற்கு வராத கோயில் பணியாளர்கள் குடியிருப்பு

இருக்கன்குடியில் பயன்பாட்டிற்கு வராத கோயில் பணியாளர்கள் குடியிருப்பு

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் வசிப்பதற்காக புதியதாக கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன.தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கோயில் பூஜாரிகளுக்காக நென்மேனி ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது.பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பு கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து பல மாதங்கள் ஆன நிலையில் இன்றுவரை கோயில் பணியாளர்கள் , பூஜாரிகள்அலுவலர்கள் குடியேறாமல் காட்சி பொருளாக உள்ளன. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த வீடுகளில் உரிய பணியாளர்கள் மற்றும் பூஜாரிகளை குடியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி