மேலும் செய்திகள்
ஸ்ரீ ரமண அகாடமியில் கணித கண்காட்சி
16 hour(s) ago
மனித உரிமை தின விழிப்புணர்வு
17 hour(s) ago
பா.ஜ., மனு
17 hour(s) ago
ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு
17 hour(s) ago
புல்ஸ்டாக் டெவலப்மெண்ட் பயிற்சி முகாம்
17 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேல ரத வீதியில் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகி வருவதை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.நகரின் நான்கு ரதவீதிகளிலும் தரைக்கு அடியில் மின் ஒயர்கள் கொண்டு செல்வதற்காக ரோடுகள் தோண்டப்பட்டது. இதில் மேல ரத விதி தேவர் சிலை அருகில் ரோடு தோண்டப்பட்ட போது குழாய் உடைப்பு ஏற்பட்டது.இதனால் கடந்த சில நாட்களாக குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து தினமும் அதிகளவு குடிநீர் வெளியேறி வாறுகாலில் கலக்கிறது. இதனால் மேல ரதவீதி, மேட்டுத்தெருக்களில் பெரும்பாலான வீடுகளுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே கோடை வெயிலின் காரணமாக தாமிரபரணி தண்ணீர் வரத்து குறைவாக உள்ள நிலையில்,8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் நகரின் பல்வேறு தெருக்களில் குடிநீர் சப்ளை நடக்கிறது. இந்நிலையில் குழாய் உடைப்பு காரணமாக அதிகளவு தண்ணீர் வீணாகிறது.எனவே, நகராட்சி நிர்வாகம் காலதாமதமின்றி நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
16 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago