உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஈகிள் ரோந்து வானகங்கள் ஆய்வு

ஈகிள் ரோந்து வானகங்கள் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்திற்குட்பட்ட அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள ஈகிள் டூவீலர்களை டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் 10 ஈகிள் டூவீலர்கள் ரோந்து வாகனங்கள் உள்ளனர். நேற்று காலை வத்திராயிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் கழுகு வாகனங்களை,டி.எஸ். பி. முகேஷ் ஜெயக்குமார், ஆய்வு செய்து, வாகனங்களின் முறையான பராமரிப்பு, சைரனின் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.மேலும் ஒவ்வொரு கழுகு வாகனத்திற்கும் இதுவரை 20 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் 40 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வின்போது சப் இன்ஸ்பெக்டர்கள், ஈகிள் பிரிவு போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ