உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்சாதனங்கள் எரிந்து தீக்கிரை

மின்சாதனங்கள் எரிந்து தீக்கிரை

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே திடீரென பிரிட்ஜ் வெடித்து தீ பிடித்ததில் வீட்டில் இருந்த மின் சாதன பொருள்கள் தீக்கிரையானது. ராஜபாளையம் பண்ணையார் ஆர்ச் அருகே குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் மகேந்திரன் 40, மனைவி சாந்தி 35, மகள் சந்தியா உள்ள நிலையில் நேற்று அதிகாலை துாங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து புகை மண்டலமாக காட்சியளித்தது.இதில் அதிர்ச்சி அடைந்த மகேந்திரன் மனைவி குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி தப்பினார். வீட்டின் உள் அதிக புகை மண்டலமாக இருந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வீரர்கள் உடனடியாக வீட்டில் இருந்த சிலிண்டர்களை வெளியேற்றினர்.மின் இணைப்பை துண்டித்து தீயை கட்டுப்படுத்தினர்.இருப்பினும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள் தீக்கிரையாகின. விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை