உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துாரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

ஸ்ரீவில்லிபுத்துாரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் பாதுகாப்பிற்காக கூடுதலாக ஒரு டி.எஸ்.பி., 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இத்தொகுதியில் 283 பூத்கள் உள்ள நிலையில் அதில் 17 பூத்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து கூமாபட்டி, வத்திராயிருப்பு, நத்தம்பட்டி, மம்சாபுரம் போலீஸ் ஸ்டேஷன்களில் கூடுதலாக ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வத்திராயிருப்பு தாலுகாவிற்கு என தனியாக ஒரு டி.எஸ்.பி. தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.செண்பகத் தோப்பு பகவதி நகர் ஓட்டு சாவடியில் குறைந்த ஓட்டுகள் உள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர 27 மொபைல் டீம் போலீசார், 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ