உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்கசிவு தடுப்பு கருவியை பொருத்த அறிவுறுத்தல்

மின்கசிவு தடுப்பு கருவியை பொருத்த அறிவுறுத்தல்

விருதுநகர் : திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளர் டேவிட் ஜெபசிங் செய்திக்குறிப்பு: காற்று, மழையின் போது மின் மாற்றிகள், கம்பங்கள், டிரான்ஸ்பார்ம்கள், ஸ்டே கம்பிகள் அருகே செல்லக்கூடாது. மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை அதன் அருகே செல்லாமல், வேறு யாரும் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மின் கம்பங்கள், ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டக்கூடாது. மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துதல், கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்தல், கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுதல் கூடாது.அனைத்து மின் இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவியை பொருத்த வேண்டும். மின் வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தகாரர்கள் மூலமாக ஐ.எஸ்.ஐ., முத்திரை, நட்சத்திரகுறியிட்ட மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழுதான மின் சாதனங்களை மாற்ற வேண்டும். ஈரக்கைகளால் மின் சாதனங்களை இயக்க வேண்டாம்.கட்டுமான பணிகளின் போது அருகே மின்கம்பிகள் இருந்தால் போதிய இடைவெளி இருப்பதை உறுதி செய்து வேலை செய்ய வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி