மேலும் செய்திகள்
ஸ்ரீ ரமண அகாடமியில் கணித கண்காட்சி
8 hour(s) ago
மனித உரிமை தின விழிப்புணர்வு
9 hour(s) ago
பா.ஜ., மனு
9 hour(s) ago
ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு
9 hour(s) ago
விருதுநகர் : விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகளின் இறப்புகளை தடுக்க மொபைல் டிரான்ஸ்போர்ட் இன்குபேட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.விருதுநகர் ரோட்டரி எலைட் சங்கத்தின் சார்பில் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட மொபைல் டிரான்ஸ்போர்ட் இன்குபேட்டர் செயல்பாட்டை எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா தலைமை வகித்து திறந்து வைத்தார்.இதில் டீன் சீதாலட்சுமி, நிலைய மருத்துவ அலுவலர் முரளிதரன், கண்காணிப்பாளர் அன்புவேல், ரோட்டரி சங்க தலைவர் அசோக்குமார், செயலாளர் சந்திரன் பங்கேற்றனர்.டீன் கூறியதாவது: இந்த இன்குபேட்டரில் குழந்தைகளுக்கு தேவையான ஆக்சிஜன், வெப்பம் உள்ளிட்ட எல்லா வசதிகளும் உள்ளது. இதில் வைத்து புதிதாக பிறந்த குழந்தைகளை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு செல்வதால் குழந்தைகளின் இறப்பு குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.மேலும் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் மட்டுமில்லாது நிறைமாதத்தில் மூச்சுத்திணறலுடன் பிறந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் போது மொபைல் டிரான்ஸ்போர்ட் இன்குபேட்டரில் வைத்து கொண்டு சென்று தேவையான சிகிச்சைகளை அளிக்க முடியும், என்றார்.
8 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago