உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாசடைந்து வரும் எஸ்.தோப்பூர் கண்மாய்; மக்கள் அச்சம்

மாசடைந்து வரும் எஸ்.தோப்பூர் கண்மாய்; மக்கள் அச்சம்

காரியாபட்டி : காரியாபட்டி எஸ்.தோப்பூர் கண்மாயில் தேங்கியிருக்கும் மழை நீர் மாசடைந்து பச்சை பசேல் என நிறம் மாறி இருப்பதால் தொற்று நோய் பரவுமோ என்கிற அச்சத்தில் கிராமத்தினர் உள்ளனர். காரியாபட்டி எஸ். தோப்பூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. இதன் மூலம் ஆயிரம் ஏக்கர் வரை பாசன வசதி பெறுகிறது. இக்கண்மாய்க்கு நீர் வரத்து ஆதாரமாக தெற்காற்றிலிருந்து வரத்து கால்வாய் உள்ளது. சமீபத்தில் பெய்த மழைக்கு இக்கண்மாய்க்கு ஓரளவுக்கு தண்ணீர் வந்தது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும், தோட்ட விவசாயம் நடைபெறும் என மக்கள் எதிர்பார்த்தனர். தண்ணீர் தேங்கி இருப்பதால் கால்நடைகளை பராமரிக்க வசதியாக இருந்தது. இந்நிலையில் ஓரிரு நாட்களில் கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீர் மாசடைந்து பச்சை பசேல் என நிறம் மாறி காணப்படுகிறது. இதில் கால்நடை, ஆட்கள் குளித்தால் உடலில் அரிப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். நிலத்தடி நீர் பாதித்து, பல்வேறு தொற்று நோய் பரவுமோ என்கிற அச்சத்தில் கிராமத்தினர் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கழிவுநீர் கலப்பதால் மாசடைந்திருப்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர். நிறம் மாறியதை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காண வேண்டும் என கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி