உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேப்பங்குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றம்

வேப்பங்குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா வேப்பங்குளத்தில்நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள், கடைகள் இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பில் உள்ள நுாலகம், மேல்நிலை தண்ணீர் தொட்டி, திருமண மண்டபம், கோயில்களை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குளத்தில் நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், முருகன்,விநாயகர், காளியம்மன் கோயில்கள், திருமண மண்டபம், நூலகம் உள்பட 38 கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தது. அப்பகுதியை சேர்ந்த அம்மையப்பன் புகாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், கிராம மக்களின் எதிர்ப்பின் காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி துவங்கியது. இதில் 10 வீடுகள், கடைகள் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் மதியம் 3:00 மணிக்குமேல் நூலகம், கோயில்கள், திருமண மண்டபங்களை இடிக்க அதிகாரிகள் முற்பட்டனர்.அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள் பின்னர் பணியை பாதியில்நிறுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறினர்.இந்நிலையில் மண்டபத்தின் முன்பு கிராம மக்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். இதில் கோயில், திருமண மண்டபம், நூலகம், மேல்நிலை தண்ணீர் தொட்டி ஆகியவற்றை இடிக்க கூடாது எனவும், இதுகுறித்து திங்கள் கிழமை விருதுநகர்கலெக்டர் அலுவலகம் சென்று மனு கொடுப்பது என முடிவு செய்தனர். வேப்பங்குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தாசில்தார் முத்துமாரி கூறியதாவது: நீர் வரத்து ஓடையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வீடுகள், கடைகள், கார் செட்டுகள் இடிக்கப்பட்டது. மாலை 6:00 மணி ஆனதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.திருமண மண்டபம்இடிப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை