உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டோரத்தில் நுங்கு கழிவுகள்

ரோட்டோரத்தில் நுங்கு கழிவுகள்

காரியாபட்டி : காரியாபட்டி - திருச்சுழி ரோட்டில் ஓரத்தில் நுங்கு கழிவுகளை கொட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் இடறி விழும் அச்சத்தில் கடந்து செல்கின்றனர். காரியாபட்டியில் இருந்து திருச்சுழி செல்லும் ரோட்டின் ஓரத்தில் நுங்கு கழிவுகளை கொட்டியுள்ளனர். அப்பகுதி வளைவான பகுதி. வேகமாக வரும் வாகனங்கள் ரோட்டை விட்டு கீழே இறங்கி செல்ல நேரிடும் போது நுங்கு கழிவுகளால் இடறி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் டூவீலரில் செல்பவர்கள் ரோட்டை விட்டு கீழே இறங்கினால் நுங்கு கழிவுகளால் இடறி விபத்தில் சிக்க நேரிடும். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரியாது. விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. விபத்திற்கு முன் இதனை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்று நுங்கு கழிவுகளை ரோட்டோரத்தில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

bgm
ஜூலை 31, 2024 07:38

மக்களுக்கு சிறிதும் சுய ஒழுக்கம் இல்லை. ஒழுக்கத்திற்கு ஒருபோதும் சமரசம் கூடாது. அபராதம் விதிக்க வேண்டும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை