உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயிலை சுற்றி வாகனங்கள் ஆக்கிரமிப்பு

ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயிலை சுற்றி வாகனங்கள் ஆக்கிரமிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலை சுற்றி வாகன ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய் , வெள்ளிக்கிழமைகளில் அதிகளவில் கோயிலுக்கு வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் முன்பகுதி காலியிடத்திலும், கோயிலை சுற்றி 3 பக்கமும் கார் , வேன்கள் நிறுத்தப்படுவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் டூவீலர்களை நிறுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.மாரியம்மன் கோயிலில் இருந்து முருகன் கோயிலுக்கு நடந்து செல்லும் பாதையை மறைத்து வேன்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கும், விபத்தில் சிக்கும் அபாயநிலை காணப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கோயில் நிர்வாகம் அலட்சியப்போக்குடன் இருப்பது பக்தர்களை மிகுந்த மனவேதனைக்கு ஆளாக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ