காரியாபட்டி, : காரியாபட்டி தாலுகாவில் 21 வி.ஏ.ஓ.,களை பணியிட மாற்றம் செய்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு உத்தரவிட்டார்.எஸ்.கல்லுப்பட்டி வி.ஏ.ஓ., சட்டநாதன் சத்திரபுளியங்குளத்திற்கும், அழகியநல்லுார் வி.ஏ.ஓ., சுதந்திரபோஸ் வலுக்கலொட்டிக்கும், கம்பிக்குடி வி.ஏ.ஓ - சரஸ்வதி வக்கணாங்குண்டிற்கும், ஏ.நெடுங்குளம் வி.ஏ.ஓ., உஷாதேவி ஆவியூருக்கும், வக்கணாங்குண்டு வி.ஏ.ஓ., கரைமேலு மல்லாங்கிணருக்கும், ஆவியூர் வி.ஏ.ஓ-, சோலைப்பிரியா எஸ்.கல்லுப்பட்டிக்கும், நந்திக்குண்டு வி.ஏ.ஓ., சந்திரமோகன் அழகியநல்லுாருக்கும், வலுக்கலொட்டி வி.ஏ.ஓ., ரஞ்சித்குமார் நந்திக்குண்டுக்கும், பாம்பாபட்டி வி.ஏ.ஓ.,மேனகா ஜோகில்பட்டிக்கும், மாங்குளம் வி.ஏ.ஓ., நாகராஜ் கம்பிக்குடிக்கும், கட்டுக்குத்தகை கரிசல்குளம் வி.ஏ.ஓ.,மீனாக்குமாரி பாம்பாட்டிக்கும், மல்லாங்கிணர் வி.ஏ.ஓ.,ராம்குமார் வடக்கு புளியம்பட்டிக்கும், முடுக்கன்குளம் வி.ஏ.ஓ., நம்பிராஜன் மாங்குளத்திற்கும், சொக்கனேந்தல் வி.ஏ.ஓ., முத்துமீனாள் முடுக்கன்குளத்திற்கும், அயன்ரெட்டியபட்டி வி.ஏ.ஓ., தனசேகரன் பந்தனேந்தலுக்கும், பாப்பணம் வி.ஏ.ஓ., நிர்மலா திம்மாபுரத்திற்கும், ஜோகில்பட்டி வி.ஏ.ஓ., வெங்கடேஷ்வரன் கட்டுக்குத்தகை கரிசல்குளத்திற்கும், சத்திரம்புளியங்குளம் வி.ஏ.ஓ., மணிகண்டன் காரியாபட்டிக்கும், அல்லாளப்பேரி வி.ஏ.ஓ., முத்துக்குமார் அயன்ரெட்டியப்பட்டிக்கும், குண்டுக்குளம் வி.ஏ.ஓ., ராம்குமார் ஏ.நெடுங்குளத்திற்கும், சூரனூர் வி.ஏ.ஓ., கண்ணன் அரியனேந்தலுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.