உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூ - வீலர் மீது லாரி மோதல் சிறுமி உட்பட இருவர் பலி

டூ - வீலர் மீது லாரி மோதல் சிறுமி உட்பட இருவர் பலி

காரியாபட்டி,:விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே இலுப்பகுளத்தைச் சேர்ந்த மணிகண்டன், 30, உறவினர் பாண்டீஸ்வரி, 35, அவரது மகள் தர்ஷினி, 12, ஆகியோர் டூ - வீலரில் மடப்புரம் கோவிலுக்கு சென்றனர். கஞ்சமநாயக்கன்பட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த செங்கல் ஏற்றிய லாரி டூ - வீலரை முந்த முயன்றது.மேலும் எதிரில், தேசியனேந்தலைச் சேர்ந்த சிவப்புராஜா, 65, மேலக்கள்ளங்குலத்தைச் சேர்ந்த மொந்தஅம்பலம், 75, ஆகியோர் காரியாபட்டிக்கு டூ - வீலரில் சென்றனர். அப்போது முந்த முயன்ற செங்கல் லாரி அடுத்தடுத்து இரண்டு டூ - விலர்களில் மோதியதில், ஐந்து பேரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் தர்ஷினி, மொந்தஅம்பலம் சம்பவயிடத்திலேயே பலியாயினர்.பலத்த காயம் அடைந்த மற்ற மூவரும், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தப்பிய லாரி டிரைவரை, ஆவியூர் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை