உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் ஒன்றிய பகுதிகளில் சேதமான மகளிர் குழு கட்டடங்கள்

சாத்துார் ஒன்றிய பகுதிகளில் சேதமான மகளிர் குழு கட்டடங்கள்

சாத்துார், : சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் பல ஊராட்சிகளில் மகளிர் குழுக் கட்டடங்கள் சேதமடைந்தும், பாழடைந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இவற்றை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடங்கள் கட்டித் தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.மகளிர் குழு பெண்கள் சிறு குறு தொழில் முனைவோர்களாகவும் மகளிர் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த காலங்களில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் சந்தித்து தங்களது வரவு செலவுகளை கணக்கு பார்ப்பதற்காக ஊராட்சிகள் தோறும் மகளிர் சுய உதவி குழு கட்டடங்கள் கட்டித் தரப்பட்டது.இந்தக் கட்டடங்கள் கூட்டங்கள் நடத்துவதற்கும் வீட்டு விசேஷங்கள் நடத்துவதற்கும் மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இவை முறையான பராமரிப்பு செய்யப்படாததால் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் தனியார் கட்டடங்களில் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். சில சமயங்களில் காலியாக உள்ள திடலில் அமர்ந்தும் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். மழைக்காலத்தில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.சாத்துார் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் தங்களுக்கென ஒரு கட்டடம் இல்லாததால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேதமடைந்த நிலையில் உள்ள சுய உதவி குழு கட்டடங்களை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டடங்களை கட்டித் தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை