| ADDED : நவ 28, 2025 07:58 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபைத் தொகுதிகளில் இறப்பு, நிரந்தர இடமாற்றம், வாகனங்களை கண்டறிய முடியாத நிலை உட்பட பல்வேறு காரணங்களால் நேற்று முன்தினம் நில வரப்படி 44 ஆயிரத்து 964 பேரின் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப பெற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதியில் 16 லட்சத்து 26 ஆயிரத்து 485 பேருக்கு நவ.4 முதல் எஸ்.ஐ.ஆர்.படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. நேற்று வரை 60 சத வீதம் படிவங்கள் திரும்பபெறப்பட்ட நிலையில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மீதமுள்ள படிவங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை இறப்பு, நிரந்தர இட மாற்றம், வாக்காளர்களை கண்டறிய முடியாத நிலை உட்பட பல்வேறு காரணங் களால் ராஜபாளையத்தில் 12,081, ஸ்ரீவில்லி புத்துாரில் 8092, சாத் தூரில் 5981, சிவகாசியில் 5100, விருதுநகரில் 5128, அருப்புக்கோட்டையில் 5558, திருச்சுழியில் 3024 என மொத்தம் 44 ஆயிரத்து 964 பேர் படிவங்கள் திரும்ப வாங்க முடியாத நிலை உள்ளது.