உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாட்டு வண்டி ஓட்டிய கலெக்டர்

மாட்டு வண்டி ஓட்டிய கலெக்டர்

விருதுநகர், : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் குடும்பத்துடன் பங்கேற்று மாட்டு வண்டியை ஓட்டி அனைவரின் கவனத்தையும்ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் பல துறைகளை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் தங்களுடைய துறைகளின் சார்பில் கலந்து கொண்டு மற்ற துறையினருடன் போட்டியிட்டனர். ஆண்களுக்கான வட்டக்கல் துாக்குதல் போட்டியில் பல துறை அலுவலர்களும் பங்கேற்றனர். மேலும் பரதநாட்டியம், சிலம்பம், வாள்வீச்சு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. போட்டியில் வென்றவர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை