உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழந்தை இயேசு தேர் பவனி

குழந்தை இயேசு தேர் பவனி

விருதுநகர்: சாத்துார் அருகே உள்ள ஒத்தையால் குழந்தை இயேசு சர்ச் திருவிழா ஜன. 25 கொடியேற்றத்துடன் துவங்கியது. பாதிரியார்கள் ஜெரோம் எரோணிமுஸ், ஜான் மில்டன் தலைமையில் குழந்தை இயேசு கொடியுடன் விழா துவங்கியது. அதன் பின் திருப்பலி, மறையுரை நடந்தது.இரண்டாம் நாள் விருதுநகர் பாண்டியன் நகர் துாய சவேரியர் சர்ச் பாதிரியார் லாரன்ஸ், எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் ஆரோக்கியம் தலைமையில் திருப்பலி, மறையுரை நடந்தது. மூன்றாம் நாள் விருதுநகர் பாதிரியார்கள் அருள்ராயன், எஸ்.எப்.எஸ்., பள்ளி பொருளாளர் இமானுவேல் சதீஷ் தலைமையில் ஆடம்பரகூட்டுத்திருப்பலி, மறையுரை,அதன் பின் மின் விளக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடந்தது.இந்த விழாவில் விருதுநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த எஸ்.எம்.எம்.ஐ., சபை சகோதரிகள், ஆர்.சி., பள்ளி ஆசிரியர்கள், கிறிஸ்துவர்கள், பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாதிரியார்கள் ஜான் மில்டன், ஆனந்த், பேரவை, இறைமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை