உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கார் விபத்து: 5 பேர் காயம்

 கார் விபத்து: 5 பேர் காயம்

ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரையில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் பாண்டி முருகன் 47, முருகன் 52, செந்தில்குமார் 44, பார்த்திபன் 57 ஆகியோர் நேற்று ராஜபாளையத்தில் நடந்த திருமணத்தில் பங்கேற்றனர். மாலை 6:00 மணிக்கு மீண்டும் மதுரைக்கு செல்லும் போது வன்னியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகில் தனியார் பஸ்சை முந்தியபோது எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் வந்த நான்கு பேரும் காயமடைந்தனர். மேலும் டூவீலரில் சென்ற ராஜபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் 26 என்பவரும் காயமடைந்தார். அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வன்னியம்பட்டி போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை