உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சிவகாசி இரட்டைப்பாலம் ரவுண்டானாவில் டிராபிக் சிக்னல்கள் அமைக்க எதிர்பார்ப்பு

 சிவகாசி இரட்டைப்பாலம் ரவுண்டானாவில் டிராபிக் சிக்னல்கள் அமைக்க எதிர்பார்ப்பு

சிவகாசி: சிவகாசி இரட்டைப் பாலம் விலக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் டிராபிக் சிக்னல்கள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் நவ. 11ல் பயன்பாட்டிற்கு வந்தது. பாலம் ஏறும் இடமான இரட்டைப் பாலம் விலக்கில் அரசு மருத்துவமனை ரோடு, கட்டளைபட்டி ரோடு, நகர் பகுதிக்குள் செல்லும் ரோடு என நான்கு ரோடுகள் பிரிந்து செல்கிறது. இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க மேம்பாலம் ஏறும் இடத்தில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் மெயின் ரோடு என்பதால் எந்நேரமும் போக்கு வரத்து நிறைந்திருக்கும். தவிர பள்ளி கல்லுாரி பஸ்கள், பட்டாசு ஆலை வாகனங்கள், மருத்துவ மனை ரயில்வே ஸ்டேஷன், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் ரவுண்டானாவை கடந்து தான் செல்கின்றனர். சிவகாசிக்கு ரவுண்டானா புதிது என்பதால் பெரும்பாலானோருக்கு எந்த வழித்தடத்தில் செல்வது என்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் இங்கு டிராபிக் சிக்னல்களும் இல்லாததால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகின்றனர். தவிர காலை மாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இங்கு உடனடியாக டிராபிக் சிக்னல்கள் அமைத்து சீரான போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி