உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மிளகாய் செடியில் சுருட்டை நோய் விவசாயிகள் அவதி

மிளகாய் செடியில் சுருட்டை நோய் விவசாயிகள் அவதி

சாத்துார்: சாத்துார் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய் செடிகளில் இலை சுருட்டு நோய் தாக்குதல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.நென்மேனி, மாயூர்நாதபுரம், என்.மேட்டுப்பட்டி, சிறுகுளம், எம்.நாகலாபுரம் பல்வேறு ஊர்களில் மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, பாசி பயிருக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த மிளகாய் செடிகளில் தற்போது பூத்து காய் பிடிக்கும் நிலையில் செடிகளின் வளர்ச்சி தடைபடும் வகையில் இலைகள் சுருண்டு இலை சுருட்டு நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.பல மருந்துகள் அடித்தும் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.இது குறித்து என்.மேட்டுப்பட்டி விவசாயி தனுஷ்கோடி ராஜ் கூறியதாவது:ஆரம்பத்தில் இருந்து நோய் தாக்குதல் தென்பட்டு வந்தது. மிகவும் விலை உயர்ந்த மருந்துகள் அடித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவரை ஆறு தடவை மருந்து அடித்துள்ளோம். ஏக்கர் ஒன்றுக்கு ரூ 30,000 வரை செலவழித்துள்ளோம். நோய்யை கட்டுப்படவில்லை. இந்தாண்டு மிளகாய் வத்தல் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ