உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஹிந்து தர்மத்தை அழிக்கும் செயலில் வனத்துறை * சடகோப ராமானுஜ ஜீயர் குற்றச்சாட்டு

ஹிந்து தர்மத்தை அழிக்கும் செயலில் வனத்துறை * சடகோப ராமானுஜ ஜீயர் குற்றச்சாட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பில் வன தெய்வங்களை வழிபட வனத்துறை கட்டணம் வசூல் செய்வது ஹிந்து தர்மத்தை அழிக்கும் செயல் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடோப ராமானுஜ ஜீயர் கூறினார்.அவர் அளித்த பேட்டி: செண்பகத் தோப்பில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் வனத்துறை கட்டணம் வசூலிக்கிறார்கள். எந்த உத்தரவின் பேரில் வசூல் செய்கிறார்கள் என தெரியவில்லை.ஆண்டாள் கோயில் நிலத்திற்கு வனத்துறை பணம் வசூலிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வனத்தில் அதிகாரிகள் கிடையாது. அங்குள்ளே மக்களே வனத்தை பராமரித்தார்கள். இன்று அவர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு கூட கட்டணம் கொடுத்துவிட்டு தான் செல்ல வேண்டிய நிலை வந்து விட்டது.அறநிலையத்துறைக்குள் வந்து கேள்வி கேட்க முதல்வருக்கு கூட உரிமை இல்லை என சட்டம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது அறநிலையத்துறை இடத்திற்கு வனத்துறை எப்படி பணம் வசூலிக்கலாம். இது ஹிந்து மக்கள் வனதெய்வங்களை தரிசிப்பதை தடுக்கும் சதித்திட்டம் போல் தெரிகிறது. பண வசூலில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். இனிமேல் வனப்பகுதியில் தெய்வங்களை தரிசிக்க கட்டண வசூலை ரத்து செய்ய வேண்டும்.சதுரகிரியில் பாலம் கட்ட வனத்துறை அனுமதி தராமல் இருப்பது ஹிந்து தர்மத்தை அழிக்கும் சதித்திட்டம் போல் தெரிகிறது. இப்பிரச்னைகளுக்கு பொங்கலுக்குள் அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மக்களை திரட்டி வனத்துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம் என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை