விருதுநகர் : விருதுநகர் மார்க்கெட்டில் தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ. 500 உயர்ந்து ரூ. 10,700, குண்டூர் வத்தல் 100 கிலோவிற்கு ரூ. 1000 குறைந்து ரூ. 16,000 முதல் ரூ. 18,000 என விற்கப்படுகிறது.இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ. 2750, ந.எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ. 330 குறைந்து ரூ. 6435, பாமாலின் 15 கிலோவிற்கு ரூ. 125 உயர்ந்து ரூ. 1550, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 2000, ரவை 30 கிலோ ரூ. 1480, மைதா 90 கிலோ ரூ. 4440, பொரிகடலை 55 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 5000 என விற்கப்படுகிறது.துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோ ரூ. 13,500, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ. 10,500, பாசிப்பருப்பு 100 கிலோ ரூ. 10,600, கொண்டக்கடலை 100 கிலோ ரூ. 6600, மல்லி நாடு 40 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 3600 முதல் ரூ. 3900, மல்லி லயன் 40 கிலோ ரூ. 3450 முதல் ரூ. 3600 என விற்பனை செய்யப்படுகிறது.உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ. 205 உயர்ந்து ரூ.10,205, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 12,100, உளுந்து நாடு 100 கிலோ ரூ. 9200, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ.5500, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ. 150 குறைந்து ரூ. 5250, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 2700 என விற்பனை செய்யப்படுகிறது.