உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  இந்தியாவின் முன் மாதிரி முதல்வராக ஸ்டாலின் சொல்கிறார் இந்திய கம்யூ., டி.ராஜா

 இந்தியாவின் முன் மாதிரி முதல்வராக ஸ்டாலின் சொல்கிறார் இந்திய கம்யூ., டி.ராஜா

ராஜபாளையம்: ''இந்தியாவின் முன் மாதிரி முதல்வராக தமிழக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார்,'' என,விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த இந்திய கம்யூ., மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அதன் தேசிய பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: பீஹார் தேர்தல் முடிவு இண்டி கூட்டணிக்கும், மகா கட்பந்தன் கூட்டணிக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது உண்மை தான். பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் இணைந்து அனைத்து வகையான சாகசங்களையும் செய்து வெற்றி பெற்றுள்ளன. தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த வேண்டும். நுாற்றாண்டு விழா கொண்டாடும் இந்திய கம்யூ., சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டு பல உயிர் தியாகங்களை செய்துள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னர், ஜனாதிபதி குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை இந்திய கம்யூ., ஏற்கவில்லை. தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பார்லிமென்டில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும். மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததிலிருந்து கூட்டாட்சி தத்துவம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு தகர்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் இந்திய கம்யூ., தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் உள்ளது. தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் இந்தியாவின் முன்மாதிரி முதல்வராக உள்ளார். எங்கள் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும். பா.ஜ., மட்டுமின்றி அவர்களுடன் சேரும் எந்த கட்சியானாலும் அவர்களை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ., கால் ஊன்றினால் அடிப்படை தன்மை பாதிக்கப்படும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை