உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது.கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, உதவி ஆணையர்(பொ) சுரேஷ், மற்றும் பரம்பரை பூஜாரிகள் முன்னிலையில் 14 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக் கிடப்பட்டன.மகளிர் சுயஉதவிக்குழுவினர், கோயில் பணியாளர்கள், அலுவலர்கள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.கடந்த ஒரு மாதத்தில் பக்தர்கள் காணிக்கை யாக ரொக்கம் ரூ 79,86,458 ம் தங்கம் 178 கிராம், வெள்ளி 572 கிராம் உண்டியலில் செலுத்தியிருந்தனர்.உண்டியல் திறப்பை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி