உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் வீட்டின் கதவை உடைத்து முகமூடி திருடர்கள் கொள்ளை முயற்சி

சிவகாசியில் வீட்டின் கதவை உடைத்து முகமூடி திருடர்கள் கொள்ளை முயற்சி

சிவகாசி: சிவகாசி அருகே பிருந்தாவனம் நகரில் பூட்டிய வீட்டில் நேற்று முன்தினம் இரவு முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்த இரு மர்ம நபர்கள் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். சிவகாசி - விளாம்பட்டி ரோட்டில் பிருந்தாவனம் நகர் 28 வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி வசந்தாதேவி 66. இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் வசந்தாதேவி வீட்டைப் பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.இதுகுறித்து வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, அதிகாலை 2:20 மணிக்கு ஹெல்மெட், முகமூடி அணிந்த இரு மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் வந்து கடப்பாரை கொண்டு கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றது தெரிய வந்தது.வீட்டில் நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் இல்லாததால் தப்பியது. மாரனேரி போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை