உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செவிலியர்கள் போராட்டம் அறிவிப்பு

செவிலியர்கள் போராட்டம் அறிவிப்பு

விருதுநகர்:''தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல பணி நிரந்தரம் செய்வது, மகப்பேறு விடுப்புக்கான சம்பளம் வழங்குவது உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, விருதுநகரில் தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொதுச்செயலாளர் சுபின் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி எம்.ஆர்.பி., செவிலியர்களை நிரந்தம் செய்ய வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கை ஏற்ப நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும். கொரோனா காலத்தில் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பது உட்பட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.,27 முதல் ஜன., 29 வரை அனைத்து செவிலியர்களும் முதல்வர், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், துறை செயலாளருக்கு கோரிக்கை மனு அனுப்புவர். ஜன., 31, பிப்., 1 ல் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவர். அனைத்து மாவட்டங்களிலும் பிப்., 3 போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படும். எம்.எல்.ஏ.,க்கள், கட்சித்தலைவர்களை பிப்., 11 முதல் பிப்., 17 வரை சந்தித்து ஆதரவு திரட்டப்படும். முதல்வரை பிப்., 21 ல் சந்தித்து முறையீடு நடத்தப்படும் என தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ