உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீரசோழனில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பயணிகள் எதிர்பார்ப்பு

வீரசோழனில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பயணிகள் எதிர்பார்ப்பு

நரிக்குடி: வீரசோழனில் வெயில், மழைக்கு ஒதுங்க இடமின்றி தவித்து வருவதால், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். நரிக்குடி வீரசோழனை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு பெரிய அளவிலான ஆட்டுச் சந்தை, காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்றன. பல்வேறு சிறு தொழில்கள் நடக்கக்கூடிய ஊராக இருந்து வருகிறது. எப்போதும் வெளியூர் மக்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும். அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், சென்னை போன்ற ஊர்களில் தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்களின் பயணங்களை கருத்தில் கொண்டு வீரசோழனிலிருந்து சென்னைக்கு நேரடியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு முக்கிய ஊர்களுக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன. ஆனால் இங்கு பஸ் ஸ்டாண்ட் வசதி கிடையாது. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பயணிகள் கடையோரங்களில் நின்று பஸ் பிடித்து செல்கின்றனர். வெயில், மழைக்கு ஒதுங்க இடமில்லாமல், கடைகளில் தஞ்சம் புகுகின்றனர். வியாபார நேரத்தில் பயணிகள் இடையூறு செய்வதால் கடைக்காரர்கள் முகம் சுளிக்கின்றனர். அது மட்டுமல்ல பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இங்கு நவீன வசதிகளுடன் புதிய பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை