உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தமிழகத்திற்கு இன்னும் மழை தேவை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேட்டி

 தமிழகத்திற்கு இன்னும் மழை தேவை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேட்டி

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையை திறந்து வைத்த பின் வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கூறியதாவது: நமக்கு இன்னும் மழை தேவைப்படுகிறது. டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதனை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளது. வானிலை ஆய்வு மைய முன்னெச்சரிக்கை தகவல் படி மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் காணொலி காட்சி மூலம் பேசி முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். இதுவரை பெரிய பாதிப்புகள் இல்லை. பள்ளி செல்லும் மாணவர்களின் நலன் கருதி சூழ்நிலையை பொறுத்து விடுமுறை அளிக்கப்படுகிறது. எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் வழங்குவதில் குளறுபடிகள் உள்ளது. தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் கண்டு கொள்ளாமல் அவர்கள் போக்கிலேயே செயல்படுகின்றனர். இருந்த போதிலும் அனைத்து வாக்காளர்களின் ஓட்டுகளை உறுதி செய்யும் வகையில் நாங்களும் களப்பணியாற்றி வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை