உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயில் விழா சமாதான கூட்டம்

கோயில் விழா சமாதான கூட்டம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா, பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக நிர்வாகத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே பிரச்னைகள் குறித்து ஆர்.டி.ஓ ., அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு தலைமை வகித்தார். இரு தரப்பினரும் இணைந்து கோயில் திருவிழா பொருட்காட்சி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, திருவிழா, பொருட்காட்சி நிகழ்ச்சிகளை நடத்திட இணையதளம் மூலம் விண்ணப்பித்து, போலீஸ் முன் அனுமதி பெற்று நடத்திட அறிவுறுத்தப்பட்டது. இரு தரப்பினரும் இணைந்து திருவிழா பொருட்காட்சி நடத்த 31 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டனர். கூட்டத்தில் தாசில்தார் செந்திவேல், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.- - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை