உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பணம் எடுத்து தருவதாக மோசடி: வாலிபர் கைது

பணம் எடுத்து தருவதாக மோசடி: வாலிபர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டுதெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி ,70. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கனரா வங்கி ஏ.டி.எம். ல் பணம் எடுக்க நின்றுள்ளார். 25 வயது நபர் கார்டை வாங்கி, நம்பரை தெரிந்து கொண்டு, வேறொரு கார்டை மிஷினில் போட்டு உங்கள் கணக்கில் பணம் இல்லை என வருகிறது. இது தொடர்பாக நாளை வங்கியில் போய் விசாரித்து கொள்ளவும், எனக்கூறி வேறு கார்டை அவர் கையில் கொடுத்து விட்டு சென்றார். பின் முதியவரின் ஏ டி.எம்.கார்டை பயன்படுத்தி 40 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். ஸ்ரீவி.,டவுன் போலீசார், சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்,26,ஐ கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ