| ADDED : செப் 25, 2011 09:57 PM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் ஒத்திகையின் போது கண்ணீர் புகை குண்டு
வெடித்ததில் போலீஸ்காரர் ஒருவர் படுகாயமடைந்தார்.அருப்புக்கோட்டை
எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலை பள்ளியில், அருப்புக்கோட்டை, திருச்சுழி சப்
டிவிஷனுக்கு உட்பட்ட போலீசார்களுக்கு பயிற்சி ஒத்திகை நடந்தது.பயிற்சியில் டி.எஸ். பி.,க்கள் முருகேசன் (அருப்புக்கோட்டை), மோகன்,
(திருச்சுழி) கலந்து கொண்டனர்.இதில், கலவரம் அடைந்ததால் எப்படி அடக்குவது
என்று பயிற்சி வழங்கப்பட்டது. இதில் கலவரகாரர்களாக ஒரு பகுதி போலீசாரும்,
கலவரத்தை அடக்கும் போலீசாராக மற்றொரு பிரிவில் போலீசாரும் ஒத்திகையில்
ஈடுபட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. ஏ.முக்குளம்
தலைமை ஏட்டு பெரியசாமி காலுக்கு அடியில் விழுந்து எதிர்பாராமல் வெடித்ததில்
பெரியசாமிக்கு காலில் பட்டு காயமடைந்தார். உடன், காயமடைந்தவரை மதுரை
ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.