உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இலவச பட்டா பகுதிகளுக்கு ரோடு

இலவச பட்டா பகுதிகளுக்கு ரோடு

விருதுநகர் : ''இலவச பட்டா வழங்கப்பட்ட பகுதிகளுக்கு ரோடு அமைப்பதாக,'' விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி தலைவர் வேட்பாளர் ஆர்.பாலகிருஷ்ணன் கூறினார். ரோசல்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு கத்தரிக்காய் சின்னத்தில் போட்டியிடும் அவர், பாண்டியன் நகர் பகுதியில் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த ஆட்சியில் இலவச பட்டா வழங்கப்பட்ட பகுதிகளுக்கு ரோடு வசதி செய்து தரப்படாமல் உள்ளது. இப்பகுதிக்கு முட்செடிகளுக்குள் தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பாம்பு, பூச்சிகள், திருட்டு பயத்துடன் மக்கள் வாழ்கின்றனர்.இங்கு ரோடு வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பேன். தண்ணீர் கட்டணத்தை 50 லிருந்து 30 ரூபாயாக குறைக்கப்படும்.அரசு நிர்ணயித்த கட்டணத்துடன் வீட்டு வரி வசூலிக்கப்படும். புதியதாக பெறும் குடிநீர் இணைப்பிற்கான கட்டணமாக ரூ. 1000 மட்டுமே வசூலக்கப்படும். தொகுப்பு வீடுகள் கட்டிதருவதோடு, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்வேன். தேவையான இடங்களில் கழிப்பறைகள் கட்டித்தரப்படும். அரசால் வழங்கப்படடும் இலவச திட்டங்களை அனைத்து தரப்பினர்களுக்கும் பெற்றுத்தரப்படும். அடிப்படை பிரச்னைக்காக ,24 மணி நேரமும் என்னை மக்கள் தொடர்பு கொள்ளலாம்,என்றார். இவருடன் 5வது வார்டு ஒன்றிய கவுன்சில் அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமாரும் பிரசாரம் செய்தார். கிளைச்செயலாளர் அருள்ஜோதி, மோகன்கர்மா, பெஸ்ட் ஜெயராஜ் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி