மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
புதுக்கோட்டை:''உ.பி.,யில் ஒதுக்கப்பட்டுள்ள நிலைக்கு தள்ளப்பட்டவர் மாயாவதி. அவர், அங்கே எப்படி ஆட்சி நடத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும்,'' என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி:தமிழக காவல் துறை நியாயமான விசாரணை மேற்கொள்ளும் என, சமீபத்தில் கொலையான பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் நம்புகின்றனர். விசாரணை நியாயமாக நடக்கும். கொலைக்கு பொறுப்பானவர்களுக்கு கட்டாயம் தண்டனை வாங்கிக் கொடுப்போம். சமூக நீதியை பாதுகாப்பதில் தி.மு.க.,வைக் கடந்து வேறு யாரும் இல்லை. ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் நலனுக்காக பாடுபடும் இயக்கம் தி.மு.க., சமூகத்தில் எந்த அந்தஸ்தில் இருந்தாலும், தவறு என்றால் அவர்களை தண்டிக்க அஞ்சாத அரசு தி.மு.க.,வும் தமிழக காவல்துறையும் தான்.ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தால், தி.மு.க.,வுக்கு இடைத்தேர்தலில் எந்த பின்னடைவும் ஏற்படாது. அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் சிக்கல் இருக்காது. தமிழகத்தில் மீண்டும் மீண்டும் தி.மு.க., தான் ஆட்சிக்கு வரும். மாயாவதி, தமிழகத்துக்கு வந்து சட்டம் - ஒழுங்கு சரியில்லை என சொல்லிச் சென்று இருக்கிறார். அவர் உ.பி.,யில் ஆட்சி நடத்திய காலத்தை மறந்து விட்டார். எப்படி ஆட்சி நடத்தினார் என்பது உலகத்துக்கே தெரியும். அதனால் தான் இன்று, உ.பி.,யில் ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ளார். இருந்தும் அவரை நாங்கள் வெறுக்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என மாயாவது சொல்லியிருக்கிறார்; ஆனால், மற்றவர்கள் யாரும் அதை ஏற்கவில்லை. தமிழக காவல் துறை மீது நம்பிக்கை இருப்பதாக எல்லோரும் சொல்லி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago