உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 54 சுங்கச்சாவடிகள் கட்டணம்: ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்வு

54 சுங்கச்சாவடிகள் கட்டணம்: ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்வு

சென்னை: தமிழகத்தில் 6,805 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, 63 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.இவற்றில் இலகு ரகம், கன ரகம் என, வாகனங்களின் தன்மைக்கு ஏற்றபடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகள் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 54 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல், சுங்கக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சமாக 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில், பல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதால், சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நேரம் என்பதால், சத்தமின்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தி உள்ளது.

எந்தெந்த சுங்கச்சாவடிகளில் உயர்வு?

மாவட்டம் சுங்கசாவடி அமைவிடம்விழுப்புரம் ஆத்துார்மதுரை போகலுார்திருச்சி பூதக்குடிவேலுார் சென்னசமுத்திரம்மதுரை சிட்டம்பட்டிதிருவண்ணாமலை இனாம்கரியநந்தல்விருதுநகர் எட்டூர்வட்டம்திருச்சி கல்லக்குடிகோவை கனியூர்மதுரை கப்பலுார்திண்டுக்கல் - கொடை ரோடுசேலம் கொழிஞ்சிபட்டிகிருஷ்ணகிரி கிருஷ்ணகிரிபுதுக்கோட்டை லெட்சுமணப்பட்டிபுதுக்கோட்டை லெம்பாலக்குடிகரூர் மணவாசிசென்னை மாத்துார்சேலம் மேட்டுப்பட்டிதிருவள்ளூர் - நல்லுார்திருநெல்வேலி நாங்குனேரிசேலம் நாதக்கரைகாஞ்சிபுரம் நெமிலிசேலம் ஓமலுார்தர்மபுரி பாளையம்வேலுார் பள்ளிக்கொண்டாராமநாதபுரம் பாம்பன் பாலம்செங்கல்பட்டு பரனுார்திருவள்ளூர் பட்டரை பெரும்புதுார்திருச்சி பொன்னம்பலப்பட்டிதுாத்துக்குடி புதுார் பாண்டியபுரம்திண்டுக்கல் புதுார்நாமக்கல் ராசம்பாளையம்திருவள்ளூர் எஸ்.வி.புரம்விழுப்புரம் உளுந்துார்பேட்டைசிவகங்கை செண்பகம்பேட்டைசென்னை சூரப்பட்டுவிழுப்புரம் - தென்மாதேவிதஞ்சாவூர் திருமாந்துறைகன்னியாகுமரி திருப்பதிசாரம்சிவகங்கை திருப்பாச்சேத்திதிருச்சி திருப்பராய்துறைதிருச்சி துவாக்குடிகடலுார் பொன்னலகரம்துாத்துக்குடி வாகைகுளம்துாத்துக்குடி ஸ்ரீவைகுண்டம்திருச்சி வாழவந்தான்கோட்டைவேலுார் - வல்லம்சென்னை - வானகரம்வேலுார் வாணியம்பாடிகள்ளக்குறிச்சி மேற்கு வீரசோழபுரம்திருப்பூர் வேலம்பட்டிகரூர் வேலன்செட்டியூர்ஈரோடு விஜயமங்கலம்விழுப்புரம் விக்கிரவாண்டி***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sampath Kumar
ஏப் 01, 2024 09:56

சுங்க சாவடியை ஏடுத்து விடுவோம் என்று எல்லாம் பசியாக ஏங்கப்பா அந்த ஆஸ்மிகள் எல்லாம் சேய்து போய்ட்டானுக போல


Mani . V
ஏப் 01, 2024 06:17

வரும்காலத்தில் காருக்கு பெட்ரோல் போடவும், சுங்கச் சாவடி கட்டணம் செலுத்தவும் கோடீஸ்வரர்களாக இருக்க வேண்டும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை