உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பப்பில் தோழியருடன் நடனமாடிய கல்லுாரி மாணவர் மயங்கி விழுந்து பலி

பப்பில் தோழியருடன் நடனமாடிய கல்லுாரி மாணவர் மயங்கி விழுந்து பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில், 'பப்' ஒன்றில், தோழியருடன் நடனமாடிய, தனியார் கல்லுாரி மாணவர் மயங்கி விழுந்து பலியானார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் முகமது சுகைல், 22. இவர் சென்னை ராமாபுரத்தில் விடுதி ஒன்றில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன் தினம் இரவு, 9:00 மணியளவில், தோழியர் மூன்று பேருடன், நுங்கம்பாக்கத்தில் ஆர்.கே.ஈவென்ட்ஸ் என்ற பெயரில், ஹரீஷ் என்பவர் நடத்தி வரும், கிங்ஸ் பார்க் ேஹாட்டலில் உள்ள, 'பப்' என்ற மதுபான விடுதிக்கு சென்றுள்ளார்.தோழியர் மது குடித்து போதையில் மிதந்ததாக கூறப்படுகிறது. அவர்களுடன் சேர்ந்து முகமது சுகைலும் நடனமாடி உள்ளார். இரவு, 10:30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, உயிருக்கு போராடிய முகமது சுகைல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'முதற்கட்ட விசாரணையில், மாணவர் மது குடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் வேறு ஏதேனும் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதும், மரணத்திற்கான காரணமும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்தான் தெரியவரும்' என்றனர்.இதற்கிடையே, சம்பவம் நடந்த, 'பப்'பில், தி.நகர் துணை கமிஷனர் கூத்தலிங்கம், அங்குள்ள ஊழியர்களிடம் விசாரித்தார். 'சிசிடிவி' கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தார். அங்கு வேறு ஏதேனும் போதைப்பொருள் வினியோகம் செய்யப்பட்டதா, சட்ட விரோத செயல்கள் நடக்கிறதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

naranam
ஆக 19, 2024 18:53

ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன... கூடு விட்டு ஆவி போனால்...


lana
ஆக 19, 2024 15:27

என் ஆசை எல்லாம் பெரிய அரசியல் வியாதிகள் மற்றும் உயர் காவல்துறை மற்ற துறை அதிகாரிகள் பிள்ளைகள் இதுபோன்ற காரியங்கள் இல் பாதிக்கப்பட வேண்டும். எனென்றால் அப்போது மட்டுமே இதற்கு உண்மையான தீர்வு நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற எல்லா நேரங்களிலும் கண் துடைப்பு நாடகம் நடவடிக்கை மட்டும்தான். எனவே கடவுளே ஏழைகள் காக்க இறங்க வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 19, 2024 13:34

துரை தயாநிதி எங்கே ????


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 19, 2024 13:33

மூர்க்கம் போதைப்பொருளை நுகரச்செய்யும் ........... தானே நுகராது .........


Ram pollachi
ஆக 19, 2024 12:50

மூடிய திறந்து மோந்து பார்த்தாலே டான்ஸ் வரும் பக்கத்தில் மூன்று குட்டிகள் டக் அவுட்...


அப்புசாமி
ஆக 19, 2024 11:24

ரெண்டு பெக் ஊத்திண்டு ஆடியிருந்தால் இந்த நிலை வந்திருக்காதே கோவாலு. குத்தாட்டம் போடறதுன்னா குவாட்டர் அடிச்சே ஆகணும்.


P Sundaramurthy
ஆக 19, 2024 07:18

தலைப்புச்செய்தியாக வெளியிட்டு நாட்டு மக்களின் அறிவுக்கண்ணை திறக்கவேண்டிய செய்தியை .... இதல்லாம் ஒரு செய்தி ...


ராமகிருஷ்ணன்
ஆக 19, 2024 06:47

அயலக அணியின் மாணவ செயலாளராக இருப்பான். விரிவான விசாரணை நடத்த வேண்டும்


karthik
ஆக 19, 2024 09:12

அதுவும் யாருடன்?


Mani . V
ஆக 19, 2024 06:25

22 வயது கல்லூரி மாணவன் ஒருவனுக்கு மூன்று தோழிகள். தோழியர் அனைவரும் மது குடித்து போதையில் மிதந்தனராம். இவர் மது அருந்தவே இல்லையாம். ஆனால், அவர்களுடன் சளைக்காமல் நடனம் ஆடினாராம். இருந்தாலும் இந்த நாகரீக வளர்ச்சியை நினைத்து பெருமை கொள்வோம்.


Anbu
ஆக 19, 2024 14:32

எதுவானாலும் மிகப் பெரியவன் சரியான நேரத்தில் சரியான தீர்ப்புக் கொடுத்து விட்டான்.


Iniyan
ஆக 19, 2024 06:03

ரொம்ப நல்லது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை