உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெங்கடேசனை வெளுத்த அண்ணாமலை

வெங்கடேசனை வெளுத்த அண்ணாமலை

அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:லோக்சபாவில் பேசிய எம்.பி., வெங்கடேசன், செங்கோல் என்பது பெண்களை அடிமைப்படுத்துவதன் அடையாளம் என்றார். இதே, வெங்கடேசன், மதுரை பெண் மேயர் இந்திராணிக்கு செங்கோல் கொடுத்திருக்கிறார். (புகைப்பட ஆதாரத்தை காட்டினார்). இதற்கு இந்தப் பெண் மேயரை அடிமைப்படுத்தியதாக அர்த்தமா?நீங்கள் செங்கோலைக் கையில் பிடிக்கலாம்; அது தவறில்லை. மோடி பார்லிமென்டில் வைத்தால் அது தவறு. இதுதான் இவர்களின் அரசியல் போலி முகத்திரை.தி.மு.க., நம்மைக் கைவிட்டுவிடக்கூடாது என்பதற்காக, வெங்கடேசன் பேசும் கருத்து கொஞ்சமும் ஏற்புடையது இல்லை. யார் பிற்போக்குத்தனமான அரசியல் செய்கிறார்கள் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்.தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிதான் பிரதானமாக இருக்க வேண்டும் என கூறினோம். தமிழக அரசு மாநிலக் கல்விக் கொள்கையில், இப்போது அதையே அறிவித்துள்ளது.ஒரு பக்கம் ஹிந்தி வேண்டாம் எனக் கூறிவிட்டு உருது பள்ளிகளை துவக்குவது குறித்து, மாநில கல்விக் கொள்கை பற்றி பேசுகிறது. மதராஸாவில் கற்பிக்கும் பாடங்களை, பட்டப்படிப்புகளை ராணுவம், சிவில், வங்கித் தேர்வுகளில் அங்கீகரிக்க வேண்டும் என மாநில அரசின் கல்விக் கொள்கை கூறுகிறது.

தமிழகத்துக்கு மூன்று முதல்வர்கள்

தமிழகத்துக்கு மட்டும் மூன்று முதல்வர்கள். கோப்பில் கையெழுத்து வாங்க, ஈ.சி.ஆரில் சபரீசன், அண்ணா நகரில் கார்த்திக், பிறகு உதயநிதியைப் பார்க்க வேண்டும். நான்கு மேயர்களை தி.மு.க., மாற்றப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அவர்களின் உட்கட்சி பிரச்னை.இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.

'டில்லியிலும் கொத்தடிமைகள்'

லோக்சபாவில் ராகுல் பேசிய பேச்சு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ''ராகுலுக்கு வாய் இருக்கிறது. லோக்சபாவில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதற்குக் கை தட்ட தி.மு.க.,வில் கொத்தடிமைகள் இருப்பதைப் போல, அங்கும் கொத்தடிமைகள் இருக்கின்றனர்.ஹிந்து தாய் தந்தைக்குப் பிறந்து, குல தெய்வ கோயிலில் கிடாய் வெட்டி, மொட்டை அடித்து அந்த சம்பிரதாயத்தில் வந்த நாங்கள், ஹிந்துவைப் பற்றிப் பேச உரிமை இருக்கிறதா அல்லது ராகுலின் பாரம்பரியத்தில் வந்த ஒருவருக்கு பேச உரிமை இருக்கிறதா'' என்றார் அண்ணாமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

K.Ramakrishnan
ஜூலை 04, 2024 12:44

அப்படின்னா பிரதமர் பேச்சுக்கு கைதட்டியவர்கள் பா. ஜ. கொத்தடிமை களா? வக்காலத்து வாங்குகிற அண்ணா மலையும் கொத்தடிமை தானா?


Mario
ஜூலை 04, 2024 08:54

அதன் பின் வெங்கடேசன் வெளுத்ததை சொல்லவேயில்ல


Ethiraj
ஜூலை 03, 2024 20:47

99 is majority not 240


Velan
ஜூலை 03, 2024 18:04

வெளுத்து எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது 5 வருடத்துக்கு


Krishna
ஜூலை 03, 2024 13:20

பொய் மட்டுமே பேசும்


ராது
ஜூலை 03, 2024 12:06

போரடிப்பிலோ குரூப்க்கு அடிமை கம்யூனிஸ்ட்ஸ் - ஹொவ் கேன் யு டாக் அபௌட் சிலவேரி மற் slave


Parasumanna Sokkaiyer Kannan
ஜூலை 03, 2024 10:56

Mr. Annamalai, BJP is in power with majority from May 2014 and no action against the scamsters and looters and so there is no wonder for such speech by Mr. Venkatesan. Today you have no majority and so you have to keep quiet.


Rajarajan
ஜூலை 03, 2024 10:53

கம்யூனிஸ்ட் என்றால் என்ன? கம்யூனிஸ்ட் என்றால் கம்யூனிஸ்ட். அவ்வளவுதான். உலக வழக்கொழிந்த ஒரு சித்தாந்தம் மற்றும் இந்த கட்சியை தி.மு.க. ஆதரிக்க தனி தில்லு வேணும். வீணான கட்சியை ஏன் கூட்டணியில் வைக்கின்றனர் என தெரியவில்லை. டெபாசிட் வாங்காத கட்சி.


Training Coordinator
ஜூலை 03, 2024 14:48

தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்கள் 10 பேர் டெபாசிட் இழந்ததும், கூட்டணி வேட்பாளர்கள் 10 பேர் டெபாசிட் இழந்ததும் மறந்துவிட்டதா?


kantharvan
ஜூலை 03, 2024 09:40

நக்கல்யா உனக்கு ..


veeramani
ஜூலை 03, 2024 09:38

அன்றைய நாட்களில் சினிமாவில் மட்டும்தான் இரண்டு, மூன்று வேடங்களில் நடித்தனர் சினிமாவின் நடிகர்கள். அனால் இன்றோ பொது தொகுதியில் எட்டிகூடகூட பார்த்துவிடாத ஒருவர் பார்லிமென்டில் பித்துப்பிடுத்தது போல உளறுகிறார். மாண்புமிகு நிதி அமைச்சர் சரியான பதில் அளித்துள்ளார். இனிமேலாவது பார்லிமென்டின் கண்ணியத்தை காப்பதற்கு உளராமல் இருந்தால் சரி


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை