உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மைக்ரோ கன்ட்ரோலர் சிப் மறு ஆய்வுக்கு விண்ணப்பம்

மைக்ரோ கன்ட்ரோலர் சிப் மறு ஆய்வுக்கு விண்ணப்பம்

லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பா.ஜ., வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரன் உட்பட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு வேட்பாளர்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின், 'மைக்ரோ கன்ட்ரோலர் சிப்'களை மறு ஆய்வு செய்ய விண்ணப்பித்துள்ளனர்.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டி, ஓட்டு சீட்டு முறைக்கு மாற உத்தரவிடக்கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏப்., 26ல் உத்தரவு பிறப்பித்தது.அதில், ஓட்டு சீட்டு முறையை நிராகரித்த நீதிமன்றம், தேர்தலில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் வேட்பாளர்கள் விரும்பினால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கன்ட்ரோலர் சிப்களை மறு ஆய்வு செய்ய அனுமதிக்க உத்தரவிட்டது.இதற்கு, தேர்தல் கமிஷனிடம் 47,200 ரூபாய் கட்டணம் செலுத்தி வேட்பாளர்கள் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தியது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள எட்டு வேட்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.வேலுார் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்திடம் 2,15,702 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற பா.ஜ., வேட்பாளர் ஏ.சி.சண்முகம், விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரிடம் 4,379 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற தே.மு.தி.க.,வின் மறைந்த தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் மறு ஆய்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.இவர்கள் போட்டியிட்ட லோக்சபா தொகுதியில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 5 சதவீத இயந்திரங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். மஹாராஷ்டிராவின் அகமதுநகர் தொகுதி, தெலுங்கானாவின் ஜஹீராபாத் தொகுதி பா.ஜ., வேட்பாளர்கள், சத்தீஸ்கரின் கன்கேர், ஹரியானாவின் கர்னால், பரிதாபாத் தொகுதி காங்., வேட்பாளர்கள், ஆந்திராவின் விஜயநகரம் தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்., வேட்பாளர் விண்ணப்பித்துள்ளனர்.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Jysenn
ஜூன் 21, 2024 07:18

In 2016 in Radapuram constituency one Appavoo was " defeated" by 49 votes. He went to the court and it as per the court order the contentious postal votes were recounted. Coning this the dubious winner went to the SC of Pakistan which restrained the HC from declaring the results. Even after eight years no body knows the real winner. This is how the SC of Pakistan operates in India.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை