மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
11 hour(s) ago
மதுரை:ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கடத்த, ஒரு காரில், 423 கிலோ கஞ்சாவை கொண்டு சென்றபோது ராமநாதபுரம் மாவட்டம், பிச்சானிகோட்டை அருகே சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.சிவகங்கை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் ஒரு காரில், 144 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இரு சம்பவங்கள் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் உசிலம்காடு பரிமளாதாஸ் உட்பட சிலர் மீது வழக்கு பதியப்பட்டது. கைதான பரிமளாதாஸ் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.மனுதாரர் தரப்பு:வாக்குமூலத்தைத் தவிர, மனுதாரருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. போதைப் பொருள் எதுவும் மனுதாரரிடமிருந்து கைப்பற்றப்படவில்லை. சம்பவத்தின்போது மனுதாரர் சென்னையில் இருந்தார்.அரசு தரப்பு:மற்ற எதிரிகளுடன் சேர்ந்து மனுதாரர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்தார். அவருக்கு எதிராக புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னையில் இதுபோன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜாமின் அனுமதிக்கக்கூடாது.இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி:இரு ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சிவகங்கை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை.இது போன்ற வழக்கில் சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாரால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை கருத்தில் கொண்டு சிவகங்கை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் முறையான, பயனுள்ள விசாரணை நடத்துவர் என இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் குற்றம் சமூகத்திற்கு எதிரான குற்றமாகும். இரு வழக்குகளும் வெவ்வேறு விசாரணை அமைப்புகளால் எவ்வாறு விசாரிக்கப்படுகிறது என்பது வெளிப்படுகிறது.விசாரணை நடத்தப்படும் விதத்தைக் கண்காணிக்க, தேவையான சிறப்பு பயிற்சிகளை வழங்க இந்த உத்தரவின் நகலை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஏ.டி.ஜி.பி.,க்கு அனுப்ப உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது.தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு எடுத்த நடவடிக்கைகளுக்கு இந்நீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது. அதே சமயம், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வது மட்டும் போதாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.குற்றம் சாட்டப்பட்டவருக்கும், மற்ற எதிரிகளுக்கும் உள்ள தொடர்பை விசாரணை அமைப்பு கண்டுபிடிக்க வேண்டும். அப்போது தான் வழக்கின் விசாரணை வெற்றிபெற முடியும். அது விசாரணை அமைப்பின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.
10 hour(s) ago | 1
11 hour(s) ago
11 hour(s) ago