உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து குவிப்பு வழக்கு ஜூன் 7க்கு தள்ளிவைப்பு

சொத்து குவிப்பு வழக்கு ஜூன் 7க்கு தள்ளிவைப்பு

சென்னை:சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவுகளை, மறுஆய்வு செய்யும் விதமாக எடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை, ஜூன் 7க்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்து உள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்குகளை விசாரணைக்கு எடுத்தார்.இந்த வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்து விட்டன.லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க, விசாரணை தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.அதன்படி, இந்த மூன்று வழக்குகளும், நேற்று, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தன.விசாரணையை, ஜூன் 7க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை