உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை - அண்ணாமலை; தென்சென்னை - தமிழிசை தமிழக பா.ஜ., முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கோவை - அண்ணாமலை; தென்சென்னை - தமிழிசை தமிழக பா.ஜ., முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை:தமிழகத்தில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் அருண் சிங் நேற்று வெளியிட்டார். கோவையில் மாநில தலைவர் அண்ணாமலை, தென்சென்னையில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகின்றனர்.பா.ஜ., வேட்பாளர்கள் 19 தொகுதிகளிலும்; அக்கட்சியின் தாமரை சின்னத்தில், கூட்டணி கட்சிகளின் நான்கு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். ஓ.பி.எஸ்.,சுக்கு சுயேச்சை சின்னத்தில் போட்டியிட ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 39 தொகுதிகளில், 23ல் பா.ஜ., போட்டியிடுகிறது. பா.ஜ.,வில் போட்டியிட தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலுடன், மத்திய அமைச்சர் முருகன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், நேற்று மாலை டில்லி சென்றனர். அதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, பா.ஜ., தேசிய பொது செயலர் அருண்சிங் நேற்றிரவு வெளியிட்டார்.பா.ஜ., முதலில் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில், அக்கட்சியின் தமிழக சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

திருத்தம்

இது, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கே சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், அவர் திருநெல்வேலியில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். எனவே, தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகள், டில்லி மேலிட தலைவர்களை தொடர்பு கொண்டு, தவறு நேர்ந்திருப்பதை சுட்டிக்காட்டினர். இதையடுத்து, சில நிமிடங்களில், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்ற திருத்தப்பட்ட வேட்பாளர்பட்டியலை பா.ஜ., வெளியிட்டது.பட்டியல் முடிவானதும், அ.தி.மு.க.,விலிருந்து பிரிந்த ஓ.பி.எஸ்.,சுக்கு ஒரு சீட்டும் ஒதுக்காதது போல் கருதப்பட்டது. நேற்று இரவு நடந்த பேச்சின்இறுதியில், ஓ.பி.எஸ்., சுயேச்சை சின்னத்தில், இதே கூட்டணியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.பா.ஜ., வேட்பாளர் பட்டியல் எண் - தொகுதி - வேட்பாளர்1 - தென் சென்னை - தமிழிசை சவுந்தரராஜன்2 - மத்திய சென்னை - வினோஜ் பி. செல்வம்3 - வேலுார் - ஏ.சி.சண்முகம்4 - கிருஷ்ணகிரி - சி.நரசிம்மன்5 - நீலகிரி - எல்.முருகன்6 - கோவை - கே.அண்ணாமலை 7 - பெரம்பலுார் - டி.ஆர்.பாரிவேந்தர்8 - திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்9 - கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை